தரம் 01மாணவர்களை பாடசாலைக்கு வரவேற்க்கும் நிகழ்வு

gate---copy---copy---copy---copy.jpg
img-20220610-wa0026---copy.jpg
front---copy---copy---copy---copy.jpg
whatsapp-image-2024-03-04-at-22.46.45.jpeg

எமது பாடசாலையில் தரம் 01 முதல் தரம் 05 வரையான வகுப்புக்கள் ஆரம்பப் பிரிவில் உள்ளடங்குகின்றன. ஆரம்பப் பிரிவு மிகவும் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு இயங்கி வருகின்றது. ஆரம்பப் பிரிவின் பகுதித் தலைவியாக திருமதி. M.S.F. சனீரா ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏனைய ஆரம்பப் பிரிவு 
ஆசிரியர்களுடன் இணைந்து சிறப்பான முறையில் ஆரம்பப் பிரிவை வழி நடத்திச் செல்கின்றார்.

தரம் 01 வகுப்பாசிரியையாக திருமதி A.F. சலீமா ஆசிரியையும் தரம் 02 இன் வகுப்பாசிரியையாக திருமதி   வஜீனா ஆசிரியையும் காணப்படுகின்றனர். தரம் 01 மற்றும் தரம் 02 வகுப்புக்களுக்கான பாடங்களாக சமயம், தமிழ், கணிதம்,சுற்றாடல் சார் செயற்பாடுகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் என்பன காணப்படுகின்றன.

தரம் 03 வகுப்பாசிரியையாக திருமதி M.I.P.C. பேகம் ஆசிரியையும் தரம் 04 இன் வகுப்பாசிரியையாக திருமதி. M.S.F.  சனீரா ஆசிரியையும் காணப்படுகின்றனர். தரம் 03 மற்றும் தரம் 04 வகுப்புக்களுக்கான பாடங்களாக சமயம், தமிழ், கணிதம்,சுற்றாடல் சார் செயற்பாடுகள், ஆங்கிலம், சிங்களம் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் என்பன காணப்படுகின்றன.

தரம் 05 வகுப்பாசிரியையாக திருமதி M.T.F. ஹுஸ்னா ஆசிரியை காணப்படுகின்றார். தரம் 05 இதற்குரிய பாடங்களாக சமயம், தமிழ், கணிதம்,சுற்றாடல் சார் செயற்பாடுகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் என்பன காணப்படுகின்றன. அத்தோடு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்காக மாணவர்கள் சிறந்த முறையில் தயார் படுத்தப்படுகின்றனர். மாலை நேர மேலதிக வகுப்புக்கள் சிறந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படுகின்றன. மாணவர்களதும் ஆசிரியர்களதும் முயற்சி, ஆர்வம் மற்றும் தியாகம் ஆகியவற்றுக்கேற்ப தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சிறந்த முறையில் கிடைக்கப் பெற்று வருகிறன்றன. எதிர்காலத்திலும் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என்ற உறுதி எமது பாடசாலையைப் பொருத்த வரை காணப்படுகிறது.