தரம் 01மாணவர்களை பாடசாலைக்கு வரவேற்க்கும் நிகழ்வு

gate---copy---copy---copy---copy.jpg
img-20220610-wa0026---copy.jpg
front---copy---copy---copy---copy.jpg
whatsapp-image-2024-03-04-at-22.46.45.jpeg

பிரதி அதிபர் செய்தி

Mr R.M சாஜித்

அன்புள்ள மாணவர்கள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளே!

 குளி கொட்டம்பபிடிய முஸ்லிம் மத்திய கல்லூரியின் மற்றுமொரு உற்சாகமான ஆண்டிற்கு உங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.  அர்ப்பணிப்புள்ள, புதுமையான மற்றும் அக்கறையுள்ள பாடசாலை அதிபர், ஆசிரியர் குழாம், பாடசாலை பணியாளர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களுடன் பணியாற்றுவதை  நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்.  

ஒவ்வொரு நாளும் புதிய கற்றல் கற்பித்தல் அனுபவங்கள், திறன்கள், சிறந்த ஆளுமைகள்  மற்றும் நற்பழக்கங்கள் என்பன கல்வியின் ஊடாக ஒவ்வொரு மாணவருக்கும் கிடைக்கப்பெறுகின்றன.

அந்த வகையில், குளி/ கொட்டம்பபிடிய முஸ்லிம் மத்திய கல்லூரியின்  பாடத்திட்டங்கள், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள், சட்ட திட்டங்கள்,  நடைமுறைகள், ஒழுக்க விதிகள் மற்றும் கலாச்சாரம் என்பவற்றை நாங்கள் மிகவும் மேம்படுத்தப்பட்ட  முறையில் பின்பற்றி சகல மாணவர்களையும் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக உருவாக்குவதற்கான பங்களிப்புகளை மேற்கொண்டு வருகின்றோம்.  

எமது ஆசிரியர் குழாம், அலுவலக உதவியாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் தங்களது சேவைகளை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பாடசாலையின் மேம்பாட்டுக்காகவும் பாரபட்சம் இல்லாமல் வழங்கி வருகின்றனர்.

இது ஒரு தொழில்நுட்ப யுகம் என்பதால் எமது பாடசாலையிலும் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துவதை  பாடசாலை வளர்ச்சியின் மிகப்பெரிய பகுதிகளில் ஒன்றாக நாம் கருதுகிறோம். ஒவ்வொரு மாணவருக்கும்  தொழில்நுட்ப அறிவு சென்றடைய வேண்டும் என்பதே எமது அவா.

எமது பாடசாலையான குளி/ கொட்டம்பபிடிய முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாக ரீதியில் அவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் தவறாது மேற்கொண்டு வருகின்றோம். இனியும் மேற்கொண்டு வருவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

 மாணவர்களை எதிர்கால தொழில் உலகிற்கு வழி நடத்திச் செல்லும்  உறுப்பினர்களாக பாடசாலை சமூகம் காணப்பட வேண்டும். அவ்வகையில்,
குளி/ கொட்டம்பபிடிய முஸ்லிம் மத்திய கல்லூரியின் பிரதி அதிபராக இருப்பதில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.   

சிறிது நேரம் ஒதுக்கி எமது பாடசாலையின் இணையதளத்தைப் பார்வையிடவும்.  எப்பொழுதும் போல், ஏதேனும் கேள்விகள் மற்றும் ஆலோசனைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.

அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

Mr R.M சாஜித்
பிரதி அதிபர்
குளி/கொட்டம்பபிடிய முஸ்லிம் மத்திய கல்லூரி.