1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரு I.N.T தசநாயக்க என்ற அமைச்சரால் அரசுக்கு சொந்தமாக இருந்த வாக்குச்சாவடி ஒன்றே பாடசாலைக்காக வேண்டி அன்பளிப்பு செய்யப்பட்டது. பாடசாலை காணியை விரிவுபடுத்திக் கொடுப்பதில் முன் நின்றவர்S.I.L.M ஷஹீட் என்ற அதிபர் ஆவார். ஆரம்பத்தில் ஓலைச்சுவடியாக இருந்த இந்தப் பாடசாலை முதன்முதலாக தசநாயக்க எனும் அமைச்சரால் கட்டிடமாக மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் கொட்டம்பபிடிய முஸ்லிம் பாடசாலையாக இருந்த எமது பாடசாலை 1974 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி குளி/கொட்டம்பபிடிய முஸ்லிம் மத்திய கல்லூரி ஆக மாற்றம் பெற்றது. 2004 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி central college ஆக மாற்றம் பெற்றது. 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் திகதி ஓலையால் வேயப்பட்ட ஒரு குடிசைக்குள் 5 மாணவர்களுடன் ஆரம்பமானது. இதை ஆரம்பிக்க உறுதுணையாக நின்றவர் சேஷ்குமார் இஸ்மாயில் லெப்பை ஆவார். 1 - 5 வரையான வகுப்புக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் M.S மொஹம்மட் என்பவரின் தலைமையின் கீழ் சாதாரண வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு உயர்தர கலை பிரிவு ஆரம்பமானது. இவ்வாண்டே இப்பிரிவின் ஊடாக 3 மாணவிகள் பல்கலைக்கழகம் செல்ல தெரிவானார்கள்.எமது பாடசாலையில் 2001 ஜனவரி 30 வணிகப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 1 - 13 வரையான வகுப்புக்களும் உயர்தரத்தில் கலை வணிகப்பிரிவுகளும் காணப்படுகின்றது.







