அல்லாஹ்வே அன்புடையோன்
அவன் வழி சென்றே உயர்ந்திடுவோம் (2)
நல்லோராய் வாழ்ந்திடவே நபி சொல் பேணியே நடந்திடுவோம் (2)
அறிவுரை கேட்டிடுவோம் நன்னெறி நீதி பயின்றிடுவோம்(2)
நல்லொழுக்கம் பழகிடுவோம் அகிலம் போற்றிட உயர்ந்திடுவோம் (2)
கொட்டம்பிடி தனியே கல்விச்சாலை தந்த சோலையிலே (2)
அதிபர் ஆசான்களை என்றும் மதித்தே நடந்திடுவோம் (2)
பெற்றோர் பெரியோரே என்றும் நன்றே செய்திடுவோம்
நன்றும் இன்றே செய்திடுவோம்
நற்பண்பை வளர்த்திடுவோம் கற்று சாதனை படைத்திடுவோம் (2)
அல்லாஹ்வே அருள் புரிவாய்!
பாரில் எம்மை உயர்த்திடுவாய்! (2)
பணிந்தே பாடுகிறோம் பாலர் எம்மை ஏற்றிடுவாய்! (2)







